தொலைத்தொடர்பில் புதிய புரட்சி செய்யும் BSNL.! சிம் கார்டு இல்லாமல், செல்நம்பர்.!! ஒரு வருடம் அளவற்ற அழைப்புகள்.!!! - Seithipunal
Seithipunal


நாம் தற்போது பயன்படுத்திவரும் அனைத்து வகையான செல்போன்களிலும் சிம் கார்டு  அவசியம் என்ற நிலையில் உள்ளது.  ஆனால், சிம் கார்டு இல்லாமல், ஆன்ட்ராயூடு செயலி மூலமே போன் பேசவும், வரும் கால்களை அட்டெண் செய்யவும், ''பி.எஸ்.என்.எல்'' நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக ''விங்ஸ்'' என்ற செயலி உருவாகியுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்த விங்ஸ் செயலியை செல்போன், கம்ப்யூட்டர் என இரண்டிலும் இன்ஸ்டால் செய்து எந்த ஒரு நெட்வொர்க்கின் செல்போனுக்கும் பேச முடியும் என்பது இதன் சிறப்பு. ஆனால் இந்த வசதி மூலம் SMS அனுப்ப முடியாது என்பது மட்டுமே இதன் பெரிய குறைபாடு.

இந்த சேவையை பெற நினைக்கும் வாடிக்கையாளர்கள் bsnl.co.in என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆதார் கார்டு எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். பின் 1,099 ரூபாய் என்ற கட்டணத்தை செலுத்திவிட்டால். வாடிக்கையாளர்களுக்கு செல்போன் நம்பர் போன்று 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்படும். 

இதனையடுத்து, இந்த சேவையை உங்களது செல்போனில் தொடங்க வாடிக்கையாளரின் இமெயிலுக்கு ஒரு 16 இலக்க ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். அந்த ரகசிய எண்ணை ngn.bsnl.co.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால், விங்க் செயலி செயல்பட தொடங்கும் என பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSNL INTRO NEW APP


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->