ஒரு ஊரே மேல மிதக்குது.. வானில் இருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு..? உலக நாடுகளை மிரள வைத்த இரகசியம்.! - Seithipunal
Seithipunal


1971 ஆம் ஆண்டு உலகின் முதல் விண்வெளி நிலையமான சல்யூட்-1, சோவியத் ஒன்றியத்தால் ஏவப்பட்டது. விண்வெளி நிலையம் என்பது விண்ணில் மனிதர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

பொதுவாக விண்கலங்களில் இருக்கக்கூடிய உந்து விசை (ராக்கெட்) அமைப்புகளோ, தரையிறங்கும் வசதிகளோ இவற்றில் இருக்காது. மாறாக, மனிதர்களை அழைத்துவரும் விண்கலங்கள் இணைவதற்கும், அதன்மூலம் மனிதர்கள் செல்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டி ருக்கும்.

பொதுவாக புவியின் தாழ்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் செயற்கைக்கோள்களாக இருக்கும் இவற்றில், மனிதர்கள் கணிசமான காலத்திற்குத் தங்கி ஆய்வுகள் மேற்கொள்ள வசதிகள் இருக்கும்.

1869இல் அமெரிக்க எழுத்தா ளர் எட்வர் ஹாலே, விண்வெளியில் மனிதர்கள் தங்குதல் பற்றி, செங்கல் சந்திரன் என்ற புனைகதையில் எழுதியதே விண்வெளி நிலையம் பற்றிய முதல் கருத்தாக்கமாகும்.

சுழலும் சக்கரங்களின்மூலம் செயற்கை (புவி) ஈர்ப்பு விசை உருவாக்கப்பட்ட விண்வெளி நிலையம் என்பதை ஸ்லோவேனியா நாட்டின் ஜெர்மன் போட்டோக்னிக் உருவகப்படுத்தியிருந்தார்.

இத்தகைய விண்வெளி நிலையம் ஒன்றை சூரிய சக்தியில் இயங்கும் வண்ணம் உருவாக்கி, இரண்டாம் உலகப்போரில் சூரியத் துப்பாக்கி என்ற பெயரில் ஆயுதமாகப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தாலும் அது வெற்றிபெறவில்லை.

போட்டோக்னிக்கின் கருத்தின்படியான சுழல் சக்கர விண்வெளி நிலையத்திற்கான வடிவமைப்பை 1951இல் வெர்னர் பிரான் அமெரிக்காவில் வெளியிட்டாலும், இத்தகைய வடிவமைப்புகள் உருப்பெறவேயில்லை.

சோவியத்தின் சல்யூட்-1தான் உலகின் முதல் விண்வெளி நிலையம் என்பதுடன், சல்யூட்-2தான் உலகின் முதல் ராணுவப் பயன்பாட்டிற்கான விண்வெளி நிலையமுமாகும்.

சோவியத்தின் சல்யூட், மிர் ஆகிய விண்வெளி நிலையங்கள், விண்வெளி நிலையம் என்ப தற்கான அடிப்படைகளைத் தொடங்கிவைத்ததுடன், இன்று செயல்பாட்டிலுள்ள ஒரே விண்வெளி நிலையமான பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன.

இவற்றின் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போதைய பன்னாட்டு விண்வெளி நிலையம், ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றின் ஆய்வுகளுக்காக இரண்டு பிரிவுகளாகச் செயல்படுகிறது.

நிலவு, செவ்வாய் ஆகியவற்றின் நுழைவுப்பகுதியாகச் செயல்படும்வண்ணம் விண்வெளி நிலையங்கள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attack from space station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->