சாதித்து காட்டிய அஜித்! தங்கம் உள்ளிட்ட 3 பதக்கங்களை வென்று சாதனை!! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின், கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக் ஷா என்ற ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு இடையே சாதனை படைத்துள்ளது.

மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான என்ற போட்டி நடந்தது. உலகெங்கிலும் இருந்து 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதில் நடிகர் அஜித்தை தொழில்நுட்ப ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் குழுவின் தக்ஷா விமானம் இரண்டாவது இடம் பிடித்து உலக அளவில் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், பெங்களூரு விமான கண்காட்சி மற்றும் டிரோன் ஒலிம்பிக் போட்டியில் ஹைபிரிட் கண்காணிப்பு வடிவமைப்பு பிரிவில் (Surveillance: Hybrid Design 4-20 Kg) அஜித்தின் தக்‌ஷா டீம் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. அதே போல் Surveillance: Fixed VTOL பிரிவிலும், Flying Formation Challenge பிரிவில் வெள்ளிப்பதக்கம் என மொத்தம் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith team dhaksha won gold


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->