4 ரூபாய்க்கு ரெட்மி நோட் 5 ப்ரோ, 55இன்ச் எல்.ஈ.டி ஸ்மார்ட் டிவி..!  ஜியோமி நிறுவனத்தின் அதிரவைக்கும் தள்ளுபடி...!! - Seithipunal
Seithipunal


4 ரூபாய்க்கு ரெட்மி நோட் 5 ப்ரோ, 55இன்ச் எல்.ஈ.டி ஸ்மார்ட் டிவி..!  எம்ஐ ஃபிளாஷ் சேல்..  

4 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஐ 3 ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள்  ஜியோமி நிறுவனம் நுழைந்தது.

ஜியோமி நிறுவனம் தற்போது நான்காம் ஆண்டு நிறைவை பல்வேறு புதிய ஆஃபர்களுடன் கொண்டாட இருக்கிறது. ஜியோமி நிறுவனத்தின் வருடாந்திர சிறப்பு விற்பனையை mi.com என்ற இணையதளத்தில் இன்று ஜூலை 10ல் தொடங்கி 12 வரை நடத்துகிறது. 

சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 10 முதல் ஜூலை 12 வரையும்,   எம்ஐ ரிவார்ட் உறுப்பினர்களுக்கு  நேற்று ஜூலை 9-ம் தேதி இரவு 12 மணி முதல் ஜூலை 12  வரையும் இந்த ஆஃபர் கிடைக்கும்.

இந்த விற்பனையின் போது வழங்கப்படும் சிறப்பு ஃபிளாஷ் சேலில் 4 ரூபாய்க்கு கிடைக்கும் பொருட்கள் :
எம்.ஐ எல்.ஈ.டி ஸ்மார்ட் டிவி 4 (55இன்ச்), 
ரெட்மி நோட் 5 ப்ரோ மொபைல் 
எம்ஐ பேண்ட் 2 
ரெட்மி ஒய்1 
ரெட்மி ஒய்2

ஆகிய பொருட்கள் 4 ரூபாய்க்கு விற்பனைக்கு செய்யப்படும் என ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் எம்ஐ மிக்ஸ் 2 மற்றும் எம்ஐ மேக்ஸ் 2 ஆகிய மாடல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

எம்ஐ ஃபிளாஷ் சேல்:
ஜியோமி நிறுவனம், 4 ரூபாய் ஃபிளாஷ் விற்பனையை ஜூலை 10 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை தினமும் மாலை 4 மணிக்கு நடத்தும். இந்த விற்பனையில் ரெட்மி ஒய்1, எம்ஐ எல்இடீ ஸ்மார்ட் டிவி 4 (55 இன்ச்), ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி ஒய்2 மற்றும் எம்ஐ பேண்ட் 2 ஆகிய அனைத்தும் நான்கு ரூபாய்க்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 Years Anniversary India Mi Offer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->