இளைஞர்களின் இயலாமையை பயன்படுத்தி இப்படியும் மோசடி நடக்குது.. வேலையை காட்டி கோடிகளை அமுக்கிய 'சோபியா' : கண்ணீர் விடும் குடும்பங்கள்..!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள உளுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இளந்தீபன். இவரிடம் சிதம்பரம் சிலுவைபுரம் பகுதியை சோபியா இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 5 லட்சம் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய இளந்தீபன் ரூ 3 லட்சம் சோபியாவிடம் கொடுத்துள்ளார். பிறகு அவர் இளந்தீபனிடம் பணிநியமன ஆணை வழங்கியுள்ளார்.இந்த ஆணை போலியானது என்பதை அறிந்த இளந்தீபன்,

இது குறித்து சிதம்பரம் தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிதம்பரம் தாலுக்கா ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சோபியா மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்த ஆரோக்கியசெல்வி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சோபியா இந்திய உணவுக் கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிவது போல் போலியான அடையாள அட்டை வைத்துக்கொண்டு வேலை தேடும் இளைஞர்களிடம் இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல லட்சங்கள் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

மேலும் கடலூரில் கம்பியூட்டர் பிரவ்சிங் சென்டர் நடத்தி வரும் வரகால்பட்டு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மூலம் போலியான பணி நியமன ஆணைகளை தயார் செய்து வழங்கியுள்ளார்.

இந்த பணி ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு விருத்தாசலத்தில் உள்ளஅரசு சேமிப்புக் கிடங்கில்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் சோபியா தனதுபோலியான அடையாள அட்டையைக் காட்டி பல ரேசன் கடைக்களுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் சோபியாவின் தாயார் ஆரோக்கிய செல்வி, ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். சோபியா கைது சம்பவத்தை அறிந்து தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth sad getting job


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->