ஆபாச புகைபடத்தை வெளியிட்டு பணம் சம்பாதித்த பட்டதாரி வாலிபர் - இளம்பெண் புகாரால் சிக்கிய அவலம்.! - Seithipunal
Seithipunal


ஆபாச புகைபடத்தை வெளியிட்டு பணம் சம்பாதித்த பட்டதாரி வாலிபர் - இளம்பெண் புகாரால் சிக்கிய அவலம்.!

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘கடந்த ஆண்டு தீபாவளிக்காக பிரபல வணிக வளாகத்தில் ஜவுளி எடுக்க சென்றபோது, சிலர் என்னை ரகசியமாக புகைப்படம் எடுத்துள்ளனர். 

அந்தப் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ‘டெலிகிராம்’ செயலி வழியாக சமூக வலைத்தளத்தில் பரப்பி, முறைகேடாக பணம் சம்பாதிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தியதில், இந்தக் குற்றச் செயல் ஈரோட்டில் நடைபெறுவது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீஸார் ஈரோடு மாவட்டதிற்கு விரைந்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ஆர்யா என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒரு பி.டெக். பட்டதாரி என்பதும், ஈரோட்டில் தங்கியிருக்கும் இவர், சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்களுக்கு சென்று அங்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் செல்போன் மூலம் புகைப்படம், வீடியோ எடுத்து அதை ஆபாசமாக சித்தரித்து, டெலிகிராம் செயலியில் உள்ள ஒரு குறிப்பிட்ட குழுவில் பதிவிட்டுள்ளது தெரிய வந்தது. 

மேலும், ஆபாச படங்கள் மற்றும் வீடியோ கேட்பவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, அவற்றை பார்ப்பதற்கான கடவுச்சொல்லை கொடுத்து அதிக அளவில் பணம் சம்பாதித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய செல்போன், மடிக்கணினி, வங்கி கணக்கு அட்டைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for uplode obscene photos in chennai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->