திருவாரூரில் பெரும்பரபரப்பு.! டீ கடையில் டீ குடித்த வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில், பல்வேறு மாநிலங்களிலும் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து, ஊருக்குள் புதிதாக வருபவர்களை அடித்து விரட்டுவதும், சில இடங்களில் அடித்துக் கொலை செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கு சமூக வலைதளங்களில், பரவும் வதந்திகளே காரணம். சென்ற வாரம் மஹாராஷ்டிர மாநிலத்தில் அடையாளம் தெரியாத 5 பேர் அடித்துக் கொல்லப் பட்டனர். குழந்தை கடத்தல் குறித்து வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று போலீசார் கூறி வருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, யுவனேஸ்வரன், முத்துசாமி, பிரேம்குமார், மணிகண்டன், ஜஸ்டின் ஆகிய 6 பேர், திருவாரூர் மாவட்டத்தில் அரசின் இலவச ஆடு, கோழி ஆகியவற்றுக்கு கொட்டகை அமைத்து கொடுப்பதற்கான டெண்டர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் ஒப்புதலோடு பல்வேறு இடங்களுக்குச் சென்று கொட்டகை அமைக்க கணக்கெடுப்பு பணியை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த டிரைவர் அய்யப்பன் என்பவரும் சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று கூத்தாநல்லூர் அருகே கமலாபுரம் பகுதியில் சத்திய மூர்த்தி உள்பட 6 பேரும் கணக்கெடுப்பு பணிக்கு சென்றுள்ளனர். கணக்கெடுப்பு பணியை முடித்த அவர்கள், அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுஅங்கு நின்ற சிலர், அவர்களைப் பற்றி விசாரித்துள்ளனர். இதற்கு அவர்கள் சரியான பதிலை கூறாமல் இருந்தனர். அதனால் குழந்தை கடத்தல் கும்பலாக இருக்குமோ என்று கிராம மக்களுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து சிலர், சத்தியமூர்த்தி உள்பட 7 பேரையும் சுற்றி வளைத்து கைகளால் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர்.

இதை கண்ட அப்பகுதி பொது மக்கள் சிலர், இந்த சம்பவம் பற்றி வடபாதிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து , 7 வாலிபர்களையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அந்த வாலிபர்களிடம் விசாரித்தனர். அப்போது 7 வாலிபர்களும், கணக்கெடுப்பு பணிக்காக அனுப்பப்பட்டவர்கள் என்பது உறுதியானது. குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

younsters attacked for thiruvarur people


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->