போலீசுக்கு காசுகொடுத்துருக்கோம் அப்டித்தான் சரக்கு விற்போம்!. டாஸ்மாக் பாரில் பரபரப்பு!. - Seithipunal
Seithipunal



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுமார் 10 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த 10 கடைகளுக்கும் அருகில் அரசு அனுமதிபெற்ற பார்கள் உள்ளது. இந்த பாத்து பார்களுமே 24 மணி நேரமும் செயல்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டு அதிகம் நடைபெறும் பகுதி என்பதால், ஜல்லிக்கட்டு விழாவன்று அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இந்த பார்களில் 24 மணி நேரமும் விற்பனை நடந்துகொண்டு வருகிறது.

மதுவில்லா தமிழகத்தை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் சில காவலர்களே 24 மணிநேரமும் மதுவிற்பதற்கு அனுமதிக்கிறார்கள் என்று கூறுகின்றனர். காவலர்கள் அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அதை கண்டுகொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

நேற்றிரவு ஆலங்குடியில் பிரபாகரன் என்பவர் எதற்காக 24 மணிநேரமும் கடையை திறந்து வைக்கிறீர்கள் என்று பார் உரிமையாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் அப்டித்தான் நடத்துவோம், போலீசுக்கு பணம் கொடுத்து தான் எல்லாம் செய்கின்றோம் என்று கூறி பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு அவரை தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

அப்பகுதி இளைஞர்கள் அந்த ஊரில் அதிக டாஸ்மாக் கடைகள் இருப்பதாலும், அங்கு உள்ள பார்கள் 24 மணிநேரமும் செயல்படுவதாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடித்து சீரழிந்து வருவதால் கலெக்டரிடம் புகார் அளிக்கவுள்ளதாக கூறுகின்றனர். ஒரு சில காவல்துறையினர் செய்யும் செயலால் ஒட்டுமொத்த துறைக்கும் கெட்டபெயர் வருகிறது.

அந்த இளைஞர்களால் அப்பகுதிக்கு விடிவுகாலம் வருமா என்று அலங்குடியை சேர்ந்த பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார். நேற்று நடந்த அந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youngster protest against tasmak bar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->