நீலகிரியில் பாட்டு கேட்ட சண்டையில் பலியான வாலிபர்! வங்கியில் பணத்தை எண்ண வேண்டியவர் சிறையில் கம்பியை எண்ணும் சோகம்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம், குன்னுார் பந்துமை அருகே அணியாடா பகுதியில் உள்ள தனியார் காட்டேஜில், நேற்று முன் தினம், ஆந்திர மாநிலம் ஹைதரபாத்தைச் சேர்ந்த ரவிகாந்த் (வயது 45) தன் மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் உட்பட ஏழு பேருடன் தங்கி இருந்தார்.

அதே காட்டேஜில் மற்றொரு அறையில், கோயம்புத்துார் வடவள்ளியைச் சேர்ந்த கோகுல்நாத் (வயது23) மருதபுரம் வசந்தகுமார் ( வயது 31) ஆகிய இருவரும் தங்கி இருந்தனர். இரவு 10-30 மணிக்கு, காட்டேஜின் இரண்டு அறைகளில் இருந்தவர்களும், தாங்கள் வைத்திருந்த ரேடியோவில், பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிக்க வைத்துள்ளனர்.

சிறிது நேரத்தில், இது தொடர்பாக, ரவிகாந்த்,  வசந்தகுமார், கோகுல் நாத் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாய்த் தகராறு, கைகலப்பில் முடிந்தது. அப்போது, மூவருமே அதிக போதையில் இருந்துள்ளனர். இந்த கைகலப்பில், ரவிகாந்தை, வசந்தகுமார், கோகுல்நாத் ஆகியோர் தள்ளி விட்டுள்ளனர்.

இதில் நிலை தடுமாறிப் போன, ரவிகாந்த் புல் தரையில் மயங்கி விழுந்தார். சுய நினைவின்றி இருந்த அவரை, குன்னுார் அரசு மருத்துவனைக்கு, அவருடன் இருந்தவர்கள் கொண்டு சென்றனர். அங்கு இருந்த டாக்டர்கள், ரவிகாந்தைப் பரிசோதித்து விட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இது தொடர்பாக, வெலிங்டன் போலிசார், வசந்தகுமார் மற்றும் கோகுல்நாத் ஆகிய இருவர் மீதும், கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில், கோகுல்நாத் எம்.பி.ஏ. பட்டதாரி. அடுத்த வாரம் வங்கி ஒன்றில் பணியில் சேர இருந்தார். மது போதையால், தன் வாழ்க்கையை இழந்து, தற்போது சிறையில் வாடுகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man killed family man


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->