சாதாரணமாக மயங்கி விழுந்த பெண் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் உறவினர்!! - Seithipunal
Seithipunal


நாகர்கோவில், கீழஉடையப்பன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பால்துரை என்பவரின் மனைவி அனுராணி இவருக்கு வயது 35. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆகிறது. அவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.


அனுராணிக்கு  உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மிகவும் அவதிப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனுராணி, நேற்று வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்கச் சென்றவர், திடீரென, அங்கு மயங்கி விழுந்தார். இதனை, பார்த்த பால்துரை சத்தம் போட்டு அலறியபடி அருகே ஓடிச்சென்றார்.

இதற்குள், சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அனுராணியை மீட்டு, அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அந்த மருத்துவமணியிலேயே அனுராணி  பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, சுசீந்திரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுராணிக்கும், பால்துரைக்கும் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கின்றது என தகவல் வெளியாகியுள்ளன. 

English Summary

young lady death


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal