இளம் பெண் எரித்துக் கொலை.! குற்றவாளியான வாலிபரை தப்ப விட்ட போலீஸ்..!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை அருகே உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்தவர்  வீரபாண்டி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். 

இவரது மகளின் பெயர் மாலதி (வயது 20). சென்னை எத்திராஜ் கல்லுாரியில் பி.ஏ. பட்டப் படிப்பு முடித்து விட்டு, மேற்படிப்பிற்காக விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜுன் 29-ஆம் தேதி, வீட்டை விட்டுச் சென்ற மாலதி, வீடு திரும்பவில்லை. இதனால், கலக்கம் அடைந்த மாலதியின் பெற்றோர், மாலிதியின் செல்போனைத் தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது.

அதனால், மாலதியின் தந்தை, ஜுிலை 1-ஆம் தேதி, காவல் நிலையத்தில் புகார் அளித்து, மகளைக் கண்டு பிடித்து தரும்படி கேட்டுள்ளார்.

போலீசார் விசாரணை செய்த போது, கடந்த ஜுன் 27-ஆம் தேதி, கடைசியாக மாலதி, சிவக்குமார்  என்பவருடன் பேசியது தெரிய வந்தது. இவருக்கும் சிவகுமாருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

சிவகுமார், ஆன்லைனில் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். அவரிடம் விசாரித்த போது, தனக்கும் மாலதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், ஆனாலும், மாலதியைக் கண்டு பிடித்து தருகிறேன், என்று தனிப்பிரிவு போலீஸ் ஜடாமுனியிடம் தெரிவித்துள்ளார்.

ஜடாமுனியும், அந்த இளைஞரை விட்டு விட்டார். பின் சிவகுமார் மாயமாகி விட்டார். அவரது செல்போனும், அடுத்து சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. 

இதற்கிடையே, நேற்று முன் தினம், மாலை, உத்தரகோசமங்கை விலக்கு அருகே உள்ள ரெயில்வே கிராசிங் பகுதியின் அருகே, எரிந்த நிலையில், ஒரு எலும்புக் கூடு கிடப்பதாக, அந்தப் பகுதியில் ஆடு மேய்த்தவர் போலீசில் சொன்னார்.

அங்கு போலீசார் சென்று பார்த்த போது, எரிந்த ஒரு உடலின் அருகே ஒரு பெண்ணின் துப்பட்டா இருந்தது. அதைக் கண்ட, மாலதியின் பெற்றோர், அது தங்கள் மகள் தான் என்று உறுதி செய்தனர்.

இந்த செய்தி அறிந்த எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா, தனிப்பிரிவு போலீஸ் ஜடாமுனியை, ஆயுதப் படைக்கு மாற்றினார்.

    போலீசார், சிவக்குமாரைத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YOUNG GIRL KILLED


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->