எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா.! ஆசை யாரை தான் விட்டுச்சி.!! சென்னையில் ஆசை காட்டி பல லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது!!! - Seithipunal
Seithipunal


சென்னையில், பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தினசரி தொடர்ச்சியாக நடந்து கொண்டே தான் வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், முடியாமல் தான் போகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

மேலும், சிட்பண்ட்ஸ், பைனான்ஸ் போன்ற நிறுவனங்களின் மூலமாக பொதுமக்களுக்கு ஆசை காட்டி கொள்ளையடித்தது மோசடி செய்தது போக இணையதளம் மூலமாகவும் பல்வேறு மோசடிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சினிமா டிக்கெட் வாங்கினால் 30% சலுகை என்ற ஆசை காட்டி ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைனில், கொடைக்கானலில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு டிக்கெட் விலையில் 30% தள்ளுபடி என்று விளம்பரம் செய்தார். இதனை நம்பி ஆன்லைனில் பலர் தங்களுடைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் எடுத்தனர். அந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விபரங்களை கொண்டு அந்த இளைஞர், போலி கார்டுகளை தயாரித்து அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில், கொடைக்கானல் தியேட்டர் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில், அவர் சென்னை சித்தலப்பாக்கத்தை சேர்ந்த இம்ரான்கான் என்பதும், ஏற்கனவே அவர் மீது ஒருசில மோசடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து போலி ஏடிஎம் கார்டுகள் மற்றும் கார்டுகள் தயாரிக்கும் எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yougster arrested by cheating case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->