இன்னும் எந்த காலத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி..? 16 ரூபாயில் மூன்று வேலை சத்தான உணவு உண்ண சொல்கிறாராமே..!! - Seithipunal
Seithipunal


கசநோய் பாதித்த மக்கள் சத்தான உணவு சாப்பிட மாதம் ஐநூறு ரூபாய் வழங்கப்படும் என்று கூறியதோடு தமிழக மக்கள் நோயில்லாமல் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இன்று உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் முதலமைச்சர் இல்லத்தில் இன்று  நடைபெற்றது.

அப்போது, காசநோய் தடுப்புப் பணியில் ஈடுபடும் களப்பணியாளர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு அரசின் சார்பில் கையடக்க கணினிகளை முதலமைச்சர் பழனிச்சாமி வழங்கினார்.

எடப்பாடி செய்திபுனல் க்கான பட முடிவு

 

அப்போது பேசிய அவர்,

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சத்தான உணவைச் சாப்பிடுவதற்காக மாதந்தோறும் 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று கூறியதோடு, பல்வேறு பகுதிகளுக்குச் நேரடியாக சென்று மக்களுக்கு காசநோய் உள்ளதா எனக் கண்டறியும், கருவிகள் அடங்கிய வாகனங்களையும் தொடங்கி வைத்தார்.

மேலும் விழாவினை தொடங்கி வைத்துவிட்டு பேசுகையில், தமிழக மக்கள் நோயில்லாமல் வாழ அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், 2025ம் ஆண்டிற்குள் காச நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும்" தெரிவித்தார்.

எடப்பாடி செய்திபுனல் க்கான பட முடிவு

காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் 16 ரூபாய்க்கு குறைவான உதவி தொகையை கொடுத்து சத்தான உணவை சாப்பிட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world-tuber-clusosis-day-cm-speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->