உலகத்திலேயே சிவலிங்கத்திற்கு குடுமி உள்ள ஒரே கோயில்..!! அதுவும் நம் தமிழகத்தில்..!! தெரியுமா உங்களுக்கு..?! - Seithipunal
Seithipunal


நமது கலாச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளவை, இங்குள்ள பழமையான ஆலயங்கள் தான். ஒவ்வொரு ஆலயத்தின் பின் புலத்திலும், ஒரு காரண காரியம் இருக்கிறது. 

அது பெரும்பாலும், புராணங்களைக் கொண்டதாக இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான் மலைக் கோயிலுக்குப் பின்னணியிலும், ஒரு புராணம் உள்ளது.

அந்தக் காலத்தில், இந்தக் கோயிலில் அர்ச்சகராகப் பணி புரிந்தவர், ஒரு தாசியிடம் வசப்பட்டு விட்டார். மற்றவர்களிடம் பொன் பொருளைக் கேட்கலாம். கோயில் பட்டரிடம் என்ன கேட்க முடியும்? ஆனாலும், அந்த தாசி, அந்த அர்ச்சகரிடம் ஒரு கோரி்க்கை வைத்தாள்.


    
ஆண்டவனுக்கு சூடுவதற்காக தொடுக்கப்பட்ட மாலையை, ஆண்டவனுக்கு அணிவதற்கு முன்பாக, தான் அணிய வேண்டும், என்று விரும்பினாள். அந்த தாசியின் பேச்சைத் தட்ட முடியாமல், அர்ச்சகரும், அந்த மாலையை, அந்தப் பெண்ணின் கழுத்தில் போட்டு விட்டார்.

அந்த சமயம், மன்னர் கோயிலுக்கு வருகை தந்தார். எதிர்பாராதவிதமாக மன்னர் வந்ததால், பயந்து போன அர்ச்சகர், தாசி அணிந்திருந்த மாலையை வாங்கி வந்து, இறைவனுக்கு சூட்டி அர்ச்சனை செய்து விட்டு, பின், அதனைப் பிரசாதமாக மன்னனுக்கு அளித்தார்.

அந்த மாலையை வாங்கிப் பார்த்த மன்னன் திடுக்கிட்டான். அந்த மாலையில், ஒரு பெண்ணில் தலை முடி சிக்கி இருந்தது. இது பற்றி, மன்னர், கோபமாக அர்ச்சகரிடம் கேட்டார்.

அதற்கு அர்ச்சகர், “இறைவனாகிய சிவலிங்கத்தில் இருந்த முடி தான் மன்னா, அது” என்றார். மன்னர் கண்கள் மேலும் சிவந்தன.

“நீர் சொல்வது உண்மையானால், இப்போதே, அந்த சிவலிங்கத்தின் மீது உள்ள குடுமியைக் காட்ட வேண்டும்” என்று ஆணையிட்டார்.

வெலவெலத்துப் போனார் அர்ச்சகர். ஆனால், இறைவன், அர்ச்சகரைக் காப்பாற்றும் நோக்கில், சிவலிங்கத்தின் மீது குடுமியைத் தோன்றச் செய்தார்.

இன்றும், இந்தக் கோயிலில் கருவரையில் வீற்றிருக்கும், சிவலிங்கத்தின் மீது குடுமி இருப்பதைக் காணலாம். அதனால் தான், இங்குள்ள இறைவனுக்கு சிகாநாதர் என்று பெயர்.

    அதனைக் கொண்டு தான் ஊரின் பெயரும் குடுமியான் மலை என்றானது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WORLD NO 1 GOD SIVA TEMPLE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->