மதுக்கடையை மூட பெண்கள் போராட்டம்.! திறக்க வலியுறுத்தி குடிமகன்கள் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில், இயங்கி வந்த 3500 க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை, நீதி மன்ற உத்தரவின் மூலம் கடந்த ஆண்டு மூடப் பட்டது. ஆனால் அதற்கு பதிலாக அதே பகுதிகளில் வேறு இடங்களில் அரசு மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் ஆங்காங்கே புதிதாகவும் மதுக்கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தளவாய்பட்டணம் உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். மேலும் இக்கிராமத்தில்  டாஸ்மாக் ஏற்கனவே செயல்பட்டு வந்த நிலையில், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி கோர்ட் உத்தரவிட்ட போது மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று அங்கு புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் 120-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து, இப்பகுதியில் அரசுப்பள்ளி உள்ளது. மதுக்கடை திறந்தால் மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்கள் அத்துடன் இக்கிராமத்தில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்கள், மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து விடுவார்கள். ஆகையால், இங்கு மதுக்கடை அமையக்ககூடாது என போராட்டம் நடத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து, இதனை அறிந்த குடிமகன்கள் அங்கு வந்து மதுக்கடையை மூடக்கூடாது என கூறினர். இதனால் குடிமகன்களுக்கும், போராட்டம் நடத்திய பெண்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து மதுக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் நாங்கள் விவசாய வேலை செய்து வருகிறோம். உள்ளூரில் டாஸ்மாக் கடை இல்லாததால் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மது அருந்தி வந்தோம். 

மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பும் போது, பலபேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். மேலும் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டி வரும் அனைவரையும் மதுக்கடையிலிருந்து அருகாமையில் போலீசார் வழி மறித்து பிடித்து விடுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளால் தான் இப்பகுதியில் மதுக்கடையை திறக்க வேண்டும் என கூறுகிறோம். இதில் யார் தலையிட்டாலும் கடையை மூட விட மாட்டோம் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womens protest against tasmac


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->