கணவனை இழந்த பெண்ணுக்கு இளைஞன் கொடுத்த ரண வேதனை..? துடி துடித்து உயிருக்கு போராடும் சோகம்..! - Seithipunal
Seithipunal


குமரி மாவட்டம், திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் கிரிஜா. இவரது கணவர் மணிகண்டன், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் வேலை செய்த இடத்தில் இறந்தார். இவர்களுக்கு 14, 12 வயதில் இருமகள்கள் உள்ளனர்.

கணவர் இறந்த பின்பு, கிரிஜா டெய்லராக வேலை செய்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். கூலி வேலை செய்துவரும் அதே பகுதியை சேர்ந்த ஜாண்றோஸ் என்பவர், கிரிஜாவிடம் தன்னை மறுமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு கிரிஜா மறுத்துள்ளார். கடந்தாண்டு ஏப்ரலில், ஜாண்றோஸ் திருமணம் செய்ய தொல்லை கொடுத்து கிரிஜாவை தாக்கியுள்ளார். இது தொடர்பாக, திருவட்டார் காவல் துறையினர் ஜாண்றோஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதன் பின்னரும், கிரிஜாவை திருமணம் செய்து கொள்வதில் இருந்து ஜாண்றோஸ் பின்வாங்கவில்லை. இந்த நிலையில், வியாழனன்று பணி முடித்து வீடு திரும்பிய கிரிஜாவை வழிமறித்து, ஜாண்றோஸ் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தும், பாட்டிலில் வைத்திருந்த ஆசிட்டை கிரிஜாவின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் ஊற்றி விட்டு ஜாண்றோஸ் தப்பியோடினார்.வலியால் துடித்த கிரிஜாவை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

ஆசிட் வீசியதில் கிரிஜாவின் 2 கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கண்கள், உடலின் பின் பகுதிகளும் பாதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ஆசிட் வீசிய ஜாண்றோசை தேடி வந்தனர். காவல் துறையினர் தேடுவதை அறிந்த ஜாண்றோஸ், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை மீட்டு உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி  இறந்தார். இச்சம்பவம் குறித்து  காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women face acid attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->