ஒரு துளி கூட வாய்ப்பு இல்லை.. இன்னும் 10 நாட்களுக்கு தமிழகம் சந்திக்கும் இயற்கை தாக்கம் - பொதுமக்களை 'நடுநடுங்க' வைக்கும் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதன் காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் கடுமையான குளிர் நிலவி வருகிறது. தமிழக கோடை வாழிடங்களில் வெப்பநிலை உறைபனி அளவிற்கு சென்றுவிட்டது. மைனஸ் டிகிரி அளவிற்கு கூட செல்லலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கான காரணம் என்ன என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்ட பொழுது, பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளனர்.

அதில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்து விட்டது. பொதுவாக வடகிழக்கு பருவமழையின் போதே பனிக்காலமும் தொடங்கி விடும்.

அதனால் தான் டிசம்பர் மாதத்தின் நடுவில் அதிக பனிப்பொழிவை தமிழகம் சந்தித்தது. இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக  மிகுந்த குளிர் நிலவி வருகிறது.

நகரப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் கோடை வாழிடத்தில் வாழ்வது போல உணர்வு ஏற்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எதிரில் வரும் வாகனங்களை மறைக்கும் அளவிற்கு, காலை நேரத்தில் பனிப்பொழிவு ஏற்படுகிறது.

சென்னையிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஊட்டியை போன்ற சூழல் தென்படுகிறது. தற்போது மேககூட்டம் குறைவாக இருக்கிறது. இதனால் வெப்பநிலை சமப்படுத்தப்படாமல் குளிர்ந்த காலநிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வடக்கில் இருந்து வரும் குளிர்ந்த காற்றுடன், கிழக்கு திசை காற்றும் வீசுவதால், தமிழக பகுதி முழுவதும் குளிர்ச்சியாக காணப்படுகிறது.

காற்றின் தாக்கம் காரணமாக இன்னும் 10 நாட்களுக்கு தமிழகத்தில் இது போன்ற குளிர் சூழ்நிலை தான் நிலவும். இந்த நேரத்தில் மழைபொழிய துளியளவும் வாய்ப்பு இல்லை. அதற்கு பிறகு படிப்படியாக குளிர் குறைய ஆரம்பிக்கும்' என்று கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

winter alert for tamlnadu imd says


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->