தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு? வெளியான முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் புதிய வாகன சட்டத்திருத்தத்தால் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்தியா முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டம் 2வது நாளை எட்டியுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாரிகளில் பெட்ரோல், டீசல் கொண்டு சென்று நிரப்பாததால், எரிபொருள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தப் போராட்டம் நீடித்தால், எரிபொருள் தட்டுப்படு அதிகரிக்கும் என்பதால்பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது..

இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார். வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது எனவும்,பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

will be no petrol and diesel shortage in TamilNadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->