இப்போது புரிகிறதா ஏன் வைரமுத்து பலிகடா ஆக்கப்பட்டார் என்று...?? 2014 தேர்தலிலேயே இந்த வகை யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறது பாஜக..!! - Seithipunal
Seithipunal


வைரமுத்து ஆண்டாளை தேவதாசி என்று சொல்லிவிட்டார் என்று முதல் முதலில் செய்தி போட்டது யார்...?

வைரமுத்து தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பின்பும் அதிகமாக தொலைக்காட்சியில் விவாதம் நடத்தியது யார்...?

வைரமுத்துவுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் போராடுவதாக கடந்த ஒருவாரமாக செய்தி போடுவது யார்...?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே கீழ்கண்ட தகவலின் மூலம் பதில் கிடைத்து விடும்.

ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவியின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளருமான திரு.பிரணாய் ராய் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தன்னுடைய என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

இந்திய அளவில் செய்தி ஊடகங்கள் மீது பாஜக அரசு காட்டி வரும் ஒடுக்குமுறைகள் குறித்தும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கையாண்டு வரும் குறுக்கு வழிகள் பற்றியும் தனது பேட்டியில் சொல்லியுள்ளார்.

அதில்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தன் கண்ணசைவில் இயக்கி வரும் மோடி மற்றும் அமித்ஷா குழுவினர், பாராளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் நடிகர் ரஜினியை அரசியலில் இறக்கி விட்டு ஆதாயம் தேடும் முயற்சியில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றுள்ளதாகவும், அதற்கு தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் முக்கிய பிரமுகர் ஒருவர் பேருதவி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பாஜக வை ப்ரமோஷன் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், தன் பேட்டியின் முடிவில் அந்த தமிழ்நாட்டு ஊடகத்தின் பெயரை குறிப்பிட்டு இதற்கென்றே கோடிகளில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் விவரித்திருக்கிறார்.

பாஜக, ரஜினி, அதிமுக ஒன்றிணைந்த அணியை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சென்று சேர்ப்பதிலும், அவர்களுக்கு ஆதரவான செய்திகளை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பலம் பெறச் செய்வதுமே இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை.

இது கூட ஒரு விதத்தில் பாஜக செய்யும் ஊழல் தான். 2014 தேர்தலிலேயே இந்த வகை யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறது பாஜக.

குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்திய போது இந்த வகை பிரச்சாரங்களே அவர்களை ஆட்சியில் அமர வைத்தது.

ஆனால் இந்த முறை பாஜகவின் திட்டங்கள் சென்ற முறை போன்று முழு பலனையும் அளிக்காது என்று தான் நினைக்கிறேன் என்று தீர்க்கமாக சொல்கிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why vairamuthu trolled by bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->