இந்த நாளில் அதிமுக கூட்டணி முடிவை அறிவிக்க காரணம் இது தான்!! வெளியான செண்டிமெண்ட்!!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக - பாமக - பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. பாமக - அதிமுக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 7 பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது. அதேபோல் ராஜ்ய சபா சீட் ஒன்றும் பாமகவிற்கு அளிக்கப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

மேலும் 21 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இதில் பாஜகவிற்கு எத்தனை இடங்கள் அளிக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி இருக்கிறது. பாமக 7 தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் 7ல் பாஜக போட்டியிட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மொத்தம் 7 இடங்கள் அதிமுக அணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த தேதியில் தனது கூட்டணி முடிவை அதிமுக வெளியிட முக்கிய காரணம், இன்று பவுர்ணமி மற்றும் மாசி மகம் என்பதால் தான். மேலும், நட்சத்திரத்தின் படி பார்த்தால் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம்.

அதாவது, மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஜெயலலிதா. இதனால், தான் இந்த தினத்தில் தங்களது கூட்டணி பற்றிய முடிவை அதிமுக வெளியிட்டது என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why Admk announced coalition at the date


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->