எச்.ராஜாவை எதிர்த்து சிவகங்கையில் போட்டியிடும் வேட்பாளர்?! காங்கிரசின் முடிவு!!  - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலைமைகளில் அமைந்து உள்ள கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டது. வேட்பாளர்களாக,

தூத்துக்குடி - தமிழிசை,

கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்,  

கோவை - சி.பி.ராதாகிருஷ்ணன்,

சிவகங்கை - ஹெச்.ராஜா,

ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன். ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். 

காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுசேரி உள்ளிட்ட 10 தொகுதியில் போட்டியிட முடிவு செய்து தொகுதிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ் சிவகங்கை தொகுதியில் இன்னமும் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது. 

இந்நிலையில் அங்கு போட்டியிட முன்னால் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அவர்மீது அந்நிய செலவாணி மோசடி வழக்கு இருப்பதால் அவரது மனு தள்ளுபடி செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. 

எனவே, சிதம்பரம் தனது மருமகளை நிறுத்த வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதே சமயம் முன்னாள் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் அவர்களும் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். 

இந்நிலையில் நடிகை குஷ்பூவும் இங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், சுதர்சன நாச்சியப்பன் அல்லது சிதம்பரத்தின் மருமகள் இருவரில் ஒருவருக்கு தான் அங்கு சீட் கிடைக்கும் என தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who will competitive against h.raja in sivagangai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->