அதிமுகவின் அழிவு ஆரம்பமாகியது.. அதிரவைக்கும் தினகரன்.. உச்சகட்ட உக்கிரத்தில் கையிலெடுத்த அதிரடி முடிவு..? - Seithipunal
Seithipunal


அழிவை நோக்கி, அ.தி.மு.க., செல்கிறது என அ.ம.மு.க., துணை பொது செயலர் தினகரன் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை எதிர்த்தும் முதல்வர் பழனிசாமியை பதவி நீக்க கூறியும் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் கூறியதால் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தினகரன் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று முன் தினம் சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வேறுபட்ட தீர்ப்பை வழங்கியது. முதலாவதாக தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி இந்திரபானர்ஜி, சட்டசபையில் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.

மேலும் சுந்தர் தலைமையிலான அமர்வு, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததன் காரணமாக இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்றும், நீதிபதியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் தினகரன் அளித்துள்ள பேட்டியில், சட்டசபையில் ஓட்டெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல் யார் என்பது தெரியும்.

தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே வழக்கை வாபஸ் பெறுகிறார். பிற எம்.எல்.ஏ.,க்கள், சட்டப்படி போராடுவர்.

ஓ.பி.எஸ்., மற்றும், ஈ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அதை மீட்டெடுக்கும் பொறுப்பை, எங்கள் கட்சிக்கு மக்கள் தந்து உள்ளனர்.துரோகிகளிடம் இருந்து, இரட்டை இலையை மீட்க, ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.

இனி வரும் காலங்களில், எந்த தேர்தல் வந்தாலும், அ.ம.மு.க சார்பில், தேர்தலை சந்தித்து, அ.தி.மு.க.,வை மீட்டு, கைப்பற்றுவோம்' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who-is-ttv-dinakaran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->