குரங்கணி தீ உண்மையை மறைத்தது யார்? உயிர்பலிக்கு காரணம் என்ன?! - Seithipunal
Seithipunal


கடந்த 11-ஆம் தேதியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். காட்டுத் தீ பற்றி எரிகிறது, என்று பத்திரிகையில் செய்திகள் வெளியாகி இருந்தும், லஞ்சம் வாங்கிக் கொண்டு, அனுமதிச் சீட்டுக்கான பணத்தையும் பெற்றுக் கொண்டு, மலை மேல் டிரக்கிங் செல்வதற்கு அனுமதித்த வனத்துறையினரின் அஜாக்கிரதையால், தீயில் மாட்டிக் கொண்டவர்கள் பலா், தீக்குப் பயந்து, பள்ளத்தாக்கில் குதித்து விட்டனர்.

kurangani forest fire க்கான பட முடிவு

கை கால்கள் முறிவுடனும், கந்தகமாக எரிந்து கொண்டிருந்த மலைப் பகுதிகளில், அவர்களை 11-ஆம் தேதி இரவே, காப்பாற்றி, மருத்துவமனைகளில் சேர்த்திருந்தால், பலரைக் காப்பாற்றி இருக்கலாம், என்று குரங்கனி பகுதியில் உள்ளவர்களும், போடியில் உள்ள ஆட்டோக்காரர்களும் குறை கூறுகின்றனர்.

11-ஆம் தேதி இரவு நேரத்தில் அவர்களைத் தேட முடியாது, என்று சொன்னது அரசின் கையாலாகாத்தனம் என்று பல அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அவர்கள் மேலும் கூறும் போது, “நமது இந்திய ராணுவம், உலகின் நான்காவது பெரிய ராணுவம்”.

kurangani forest fire க்கான பட முடிவு

குரங்கனி தீ விபத்து நடந்த அன்று இரவு, ஹெலிகாப்டர்கள் வந்திருந்தால், அதிலேயே, அதிக வெளிச்சம் தரும் விளக்குகளைப் பொறுத்தி, காயம் பட்டவர்களைப் பார்த்திருக்கலாம். அந்த வெளிச்சத்திலேயே, குரங்கனி மக்கள் எளிதாக, மலையில் நடந்து சென்று, அங்கிருப்பவர்களை எல்லாம் மீட்டிருப்பார்கள்.

kurangani forest fire க்கான பட முடிவு

தீ விபத்து செய்தி அறிந்ததும், முதலில் அரவாள் மற்றும், தண்ணீருடன் ஓடி வந்தவர்கள், உள்ளுர்வாசிகள் தான். மேலும் தீக்காயம் பட்டவர்களை, வாழை இலையில் வைத்தோ, அல்லது, வாழை மட்டையில் வைத்தோ தான் மலையிலிருந்து கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்திருந்தால், அவர்களில் பலரைக் காப்பாற்றி இருக்கலாம். இத்தனை உயிர்கள் பலியானதைத் தடுத்திருக்கலாம், என போடி மற்றும் குரங்கனியில் உள்ளவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who is the culprit in kurangani forest fire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->