தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


கடந்த மே மாதம் 29-ஆம் தேதி, தென்மேற்குப் பருவமழையானது தொடங்கியது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கிவருகிறது. அதேபோல் கேரளா மாநிலத்தையும் இந்த மழை புரட்டி போட்டு உள்ளது. மேலும், கர்நாடகா மாநிலத்தில் காவேரி கரையோரம் உள்ள பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. 

அதேபோல், கர்நாடகாவில் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கே.ஆர்.எஸ் அணை தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்க கூடும். எனவே, காவிரி கரையோர மக்களும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், இன்று (15.07.2018) தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் காண மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது, ''வட மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக வங்ககடற்பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weather report for kovai and tn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->