பசுமைவழி சாலை வேண்டும்..! அந்தர் பல்ட்டி அடித்த விவசாயிகள்..!! - Seithipunal
Seithipunal


சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் பாப்பரெட்டிப்பட்டி பகுதி விவசாயிகள் பசுமை வழி சாலை வருவது நல்லது தான் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் 08 வழி பசுமை சாலைக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் கடும் பாதிப்புள்ளாகிறது. இதில் ஆயிரம் ஹெக்டேர் அரசு நிலம் வழியாகவும், 4 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வழியாகவும் இந்த பாதை அமைகிறது. மேலும், சேர்வராயன், கல்வராயன் மலை உள்பட 8 மலைகள் வழியாக,120 ஹெக்டேர் வனப்பகுதியும் வழியாகவும் இந்த சாலை அமைகிறது. 

23 பெரிய பாலங்களும், 156 சிறு பாலங்களும், 9 மேம்பாலங்களும், பாலங்களுக்கு கீழ் 22 வாகன கீழ் வழிச்சாலையும், 2 பாலங்களுக்கு கீழ் இன்னொரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. வனப் பகுதியில் 3 சுரங்கப் பாதைகளும், 8 சுங்க சாவடிகளும், லாரிகள் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடம் 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. 

இதனால் விவசாயிகளும், கிராம மக்களும், சுற்றுசூழல் ஆர்வாளர்களும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சேலம் பசுமை வழிச்சாலை பற்றி முகநூலில் பதிவு செய்தால் கூட தமிழக அரசு கைது நடவடிக்கையை ஆரம்பித்தது. தமிழக அரசின் இந்த அராஜக போக்கை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கைளை வெளியிட்டு வருகின்றனர். 

இருப்பினும், சாலை அமைப்பதற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, நில அளவீடு செய்யும் பணியை வருவாய் துறையினர் சர்வாதிகாரத்துடன் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், 8 வழி பசுமை சாலையில் தேசிய நீர்வழி பாதையும் அமைத்து அதை அந்தந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் இணைக்க அரசு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று்ம், இந்த பசுமை வழி சாலை வருவதால் நல்லது நடக்கும் என நம்புவதாக, தருமபுரி மாவட்டம் பாப்பரெட்டிப்பட்டி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாப்பரெட்டிப்பட்டி விவசாயிகளின் இந்த கருத்து சேலம் பகுதி விவாசிகளை அதிர்ச்சியாக்கியுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WE NEED 8 WAY GREEN ROAD


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->