தமிழக ஆறுகள் இப்படித்தான் காணாமல் போகிறதா..? படத்தில் இருப்பது என்னவென்று தெரிந்தால் அதிர்ந்து போய்விடுவீர்கள்.! - Seithipunal
Seithipunal


மழைபெய்தால் வெள்ளம் சாலையில் போகின்றது என அரசை திட்டி தீர்த்துவிட்டோம். ஆனால் தவறு யாரிடம்? முற்றிலும் அரசு மட்டுமா இதற்கு காரணம்? பொதுமக்கள் ஆகிய நம்மிடமும் உள்ளது.

காட்டாற்று வெள்ளம் போல ஓடிய திருப்பூர், கொங்குநகர், ஓம்சக்தி கோவில் சாலையை நேரில் சென்று பார்த்த பொழுதுதான் உண்மை புரிந்தது.

ஒரு காலத்தில் பெரிய ஓடைகரையாக இருந்த இந்த நீர்வழித்தடம் காலப்போக்கில் மக்களால் பல விதங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு குறுக்கப்பட்டு சிறிய சாக்கடையாக மாறிவிட்டது.

ஒரு பக்கம் இரண்டடிவாய்க்கால் போல இருக்கின்றது, இன்னொரு பக்கம் பெரிய வாய்க்கால் போல உள்ளது.

இன்னொரு பக்கம் குறுகிய பெரிய சாக்கடை போல உள்ளது. இப்படி அவரவர் மனம் போல இந்த ஓடை மன்னிக்கவும் சாக்கடையின் அகலம் பலவித அளவுகளில், பலவித வடிவங்களில் உள்ளது.

போதாக்குறைக்கு பாலிதீன் கழிவு குப்பைகள் வேறு எங்கு பார்த்தாலும் சாக்கடையை அடைத்துக்கொண்டு உள்ளது.

இப்படி இருந்தால் மழைநீர் எப்படி செல்லும்? இது யார் தவறு? எனது கட்டிடத்தை விட்டு குப்பைகள் வெளியே சென்றால் போதும் என சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவு குப்பைகளையும், கட்டிட கழிவுகளையும் கொட்டிவைத்தால் வெள்ளம் சாலையில் ஓடாமல் சாக்கடையிலா ஓடும்?

ஓம்சக்தி கோவில் முன்பாக சாக்கடையை பாலிதீன் கழிவு குப்பைகள் அடைத்துகொண்டதால்தான் மழைநீர் வெள்ளம் சாலையில் சென்றுள்ளது.

மாநகராட்சி நிர்வாகமும் உடனுக்குடன் குப்பைகளை சுத்தம் செய்து வருவதுடன் இப்படி சாலைகளில் குப்பைகளை கொட்டிகுவிக்கும் மக்கள் மீதும், ஓடை, சாக்கடைகளை ஆக்கிரமித்து கட்டியுள்ள நபர்கள் மீதும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

SOURCE: நம்ம திருப்பூர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WATER FLOW IN TIRUPPUR


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->