திண்டுக்கல்: வாட்ச்மேன் சொத்தை ஆட்டையை போட்ட கல்லூரி..! நிர்கதியாய் நின்ற  குடும்பம்..!! வேறு வழியின்றி எடுதத முடிவு..!!! - Seithipunal
Seithipunal


பணக்காரர்களாக இருப்பவர்கள் பெரும்பாலானோர், காரியவாதிகளாகவே இருக்கின்றனர். தங்களது காரியத்தைச் சாதிக்க, தனக்கு கீழ் உள்ள அப்பாவிகளை ஏமாற்றுவதில் அவர்கள் கை தேர்ந்தவர்கள், என்பதை, இப்போதும், ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது.

திண்டுக்கல் – திருச்சி சாலை என்.ஜி.ஓ. காலனி அருகே, தனியார் கேட்டரிங் கல்லுாரி நடத்தி வருபவர் சபரி இந்திரகோபால்.

இவரது கல்லுாரியில் வாட்ச்மேனாக இருந்தவர் நாகராஜன் (வயது 40). இவர் தன் முதலாளிக்கு மிக விசுவாசமாக இருந்தார். அவரிடம் எப்போதும் மிகப் பணிவாகவே இருப்பார்.

அதைப் பயன் படுத்திக் கொள்ள நினைத்தார் சபரி. தனது கல்லுாரிக்குப் புதிய கட்டிடம் கட்ட பணம் தேவைப் பட்டது அவருக்கு.

நைசாக வாட்ச்மேனிடம் பரிதாபமாக தன் பணத் தேவையைப் பற்றிப் பேசினார். இதனால், பரிதாபப்ட்ட அந்த வாட்ச்மேன், தன்னிடம் உள்ள ஒரு சொத்தைப் பற்றிக் கூறினார்.

வாட்ச்மேன் நாகராஜனுக்குச் சொந்தமாக, கோப்பம்பட்டியில் 3.50 ஏக்கர் நிலம் உள்ளது. சபரி, அந்த சொத்தின் மேல் 5 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கினார்.

புதிய கல்லுாரிக் கட்டிடத்தில், நாகராஜனுக்கு, கேன்டீன் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தார். பாவம், அந்த ஏழை அதை நம்பினார். ஆனால், புதிய கல்லுாரிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், அதனை சபரி நல்ல விலைக்கு விற்று விட்டார்.

இதனால், தன் நிலத்தின் பேரில் வாங்கிய பணத்தைத் திரும்பக் கேட்டார். பல முறை கேட்டும், சபரி பணத்தை தரவில்லை.

இதனால் மனமுடைந்த நாகராஜன், சபரியின் கல்லுாரி வளாகத்தின் முன்பாக, தன் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் உடலில் பெட்ரோல் ஊற்றினார். சிறிது நேரத்தில், அனைவரும் மயங்கி விழுந்தனர்.

அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அந்த நால்வரையும் சேர்த்தனர். பின் நாகராஜன் அளித்த புகாரின் பெயரில், திண்டுக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WATCHMEN FAMILY ATTEMPT TO SUICIDE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->