மாவட்ட ஆட்சியரின் ஒரே உத்தரவு..? மொத்தமாய் கலங்கி போன உணவு நிறுவன உரிமையாளர்கள் - மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தரமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது மீறுபவர்கள்மீது கடும் நடவாடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர்.மு.ஆசியா மரியம் எச்சரித்து உள்ளர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட பேக்கரிகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் உணவு விடுதிகள் கேண்டீன்கள் சமையலர்கள் மற்றும் இதர இடங்களில் காரங்கள் இனிப்பு பலகாரங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் சுத்தமானதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு உணவு நிறுவனங்கள் உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

மேலும், உணவு வணிகர்கள் சமையல் எண்ணெய்நாள் ஒன்றுக்கு 50 லிட்டருக்கு மேல் உபயோகம்செய்தால் அவர்கள் எண்ணெய் அப்புறப்படுத்திய விபரப் பதிவேடு பராமரிக்க வேண்டும்.

எந்த எந்த எண்ணெய் எவ்வளவு அளவு பயன்படுத்தப்பட்டது. அதை எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டது அல்லது மறு சுழற்சி செய்யப்பட்டது என்ற விபரத்தினை பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க உத்தரவிடப்படுகிறது.

அவற்றை மீண்டும் உபயோகிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்துவதால் மனித உடலுக்கு புற்றுநோய் மற்றும் பல உடல் உபாதை உண்டாகி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை எண்ணெய் 146உணவு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையின் அடிப்படையில் 82 தரமானது என்றும், தரம்குறைவானது பாதுகாப்பற்றது என்று 64 ஆய்வறிக்கையும் வரப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டு ரூ.5,95,500 அபராதம்விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள்உணவுப் பொருட்கள் சம்பந்தமாக 94440 42322 என்ற கட்செவி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

warning circular to the hotels


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->