#சற்றுமுன்: அறிவாலயத்தில் குவியும் பாஜக தலைவர்கள்.. மகிழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் - உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்..! - Seithipunal
Seithipunal


பாஜக உடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று திமுக கூறி வந்தாலும், மறைமுகமாக இணையும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஒரு சர்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது.

இந்தநிலையில், இப்போது பாஜகவை சேர்ந்த  மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவாலயத்திற்கு வந்தது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

அவருடன் மேலும் பல பாஜக தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். மேலும் மாவட்ட முக்கிய பொறுப்பில் உள்ள சில பாஜக தலைவர்களும் அங்கு வருகை புரிந்துள்ளனர்.

எதற்காக அங்கு வருகை புரிந்தார்கள் என்று விசாரித்ததில், தி.மு.க வர்த்தகர் அணி மாநிலச் செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ளவே வந்தார்கள்.

திருமணம் நடைபெறும் கலைஞர் அரங்கிற்கு செல்ல அறிவாலையத்தை கடந்த பிறகு செல்லவேண்டி இருந்த போதிலும், தயக்கப்படாமல் பாஜக தலைவர்கள் சென்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணனை வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை அழைத்துச் சென்ற காசி.முத்துமாணிக்கம், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கி.வீரமணி ஆகியோர் இருந்த அறையில் அமர வைத்தார்.

அதன்பிறகு சிறிது நேரம் கழித்து மேடைக்கு வந்த மேடைக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் மணமக்களை வாழ்த்திவிட்டுக் கிளம்பினார்.

English Summary

visit-to-dmks-anna-arivalayam

செய்திகள்Seithipunal