டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு !! - Seithipunal
Seithipunal


இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கை திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார்.  இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு, ஆகஸ்ட் 18ம் தேதி, விஷ்ணுபிரியா தனது முகாம் விடுதியில் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை அடுத்து தமிழக அரசு, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் எந்த முடிவும் தெரியவில்லை, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தன் ‘’மகளின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து விஷ்ணுபிரியாவின் தந்தை மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், “டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும்” என்று கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி உத்தரவிட்டனர். 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் மதன்.பி.லோகூர், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது.  அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், “விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் முடித்துவிட்டனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழக அரசு வாதிட்டது.

முடிவாக நீதிபதிகள், “இது ஒரு பெண் உயர் போலீஸ் அதிகாரியின் மரணம் தொடர்பான வழக்கு. அவர் தற்கொலை செய்யவில்லை என்று அவரது தந்தை கூறுகிறார். எனவே, உண்மை நிலையைக் கண்டறிவது மிகவும் முக்கியமாகும். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை''. என்று உத்தரவிட்டனர். 

இதையடுத்து டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து.  விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் இன்று சிபிஐ அதிகாரிகள் உயர்நீதி மன்றத்தில், விஷ்ணுபிரியா வழக்கில் போதுமான அளவு சாட்சி இல்லாததால், இது தற்கொலை தான் என்று அறிக்கை சமர்ப்பித்தனர். இதனையடுத்து, நீதிபதிகள் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியை வழக்கை திரும்ப பெரும் படி அறிவுறுத்தி. சம்மன் அனுப்பியுள்ளனர். இதனால் இந்த கொலை வழக்கு பல மர்மமான விடயங்களை கடந்து வந்து. எதற்கும் முடிவு தெரியாமல் முடிவு பெற்றது.

இந்நிலையில், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை அளிக்க கோவை குற்றவியல் நடுவர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உயரதிகாரிகளின் அழுத்தத்தால் விஷ்ணுபிரியா தற்கொலை செய்யவில்லை என சிபிஐ அறிக்கை அளித்ததை எதிர்த்து அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishnu Priya casei CBI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->