பாஜக-காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அடிதடி!! கன்னியாகுமரியில் பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வடசேரி அருகே பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அங்கு பாஜக மற்றும் அதிமுக கட்சிகளின் கொடிகள் தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வசந்தகுமார் வந்துள்ளார். அவருடன் திமுக நிர்வாகிகள் சிலரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் வந்துள்ளனர். அப்போது, அங்கு அதிமுக பாஜக கொடி கட்டி இருப்பதை கண்டார்கள்.

எனவே, ஆத்திரம் அடைந்த திமுக காங்கிரஸ் தொண்டர்கள் தோரணங்கள் கொடிகள் கட்டியிருப்பதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? என போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், திமுக காங்கிரஸ் மற்றும் அதிமுக பாஜக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படவே போலீசார் விரைந்து வந்து, இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் வாகனத்தில் இருந்து இறங்கி அவரது தொண்டர்கள் அமைதிப்படுத்தினார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வசந்தகுமாரும் அவரது தொண்டர்களை அமைதிப்படுத்த, பின்னர் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Violence in kaniyakumari between bjp and congress


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->