தமிழக அரசியலுக்கு விஜயகாந்த் வைத்த டிவிஸ்ட்!! இத யாருமே எதிர்பாத்திருக்க மாட்டங்க!!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு கட்சிகளும் வருகின்ற மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வந்த நிலையில், ஏறக்குறைய கூட்டணி கட்சிகள், எந்த அணியில் இணையும் என்பது உறுதியாகி விட்டது. ஆனால், தேமுதிக மட்டும் இன்னமும் ஒரு உறுதியான முடிவை தெரிவிக்காமல் உள்ளது.

அதிமுகவிடம் தமிழகத்தின் மூன்றாவது கட்சியான பாமகவிற்கு கொடுக்கப்பட்ட அளவு தங்களுக்கும் சீட் வேண்டும் என கேட்ட நிலையில், அதிமுகவை சேர்ந்தவர்கள், தேமுதிகவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு பதிலை கூறவில்லை.

பாஜக தரப்பில் தொடர்ந்து தேமுதிகவுடன் பேசப்பட்டு வந்த நிலையில், நான்கு  நாட்களாக நடந்த பேச்சுவார்த்தை தற்போது சம்மதம் இல்லாமல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே தேமுதிக சார்பில் கூட்டணி பேசுவதற்கு அமைக்கப்பட்ட குழுவினருடன் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனை நடத்திய பிறகு தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்த்தை நேரில் சந்தித்து அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாக திருநாவுக்கரசர்  அறிவித்தார். 

இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவால் தேமுதிக எதிர்பார்ப்பதை கொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் தேமுதிக இரட்டை இலக்கில் தொகுதியை கேட்டுள்ளது. 

இதையும் படிங்க: தேமுதிகவுடன் கூட்டணியா என கேட்ட கேள்விக்கு ஸ்டாலின் கூறிய அந்த பதிலால்!! சிரித்த செய்தியாளர்கள்!!

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் விஜயகாந்தை சந்திக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் செல்வதாக தகவல் வந்துள்ளது. முன்னதாக செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்த கேள்விக்கு "தேமுதிக பற்றி பேசவே வேனாம்" என கூறிய ஸ்டாலின் இப்பொழுது இப்படிப்பட்ட சந்திப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பமாக அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: திமுகவின் கதையை முடிக்க போறது நாங்க தான்!! வெளியான தகவலால் உஷாரான ஸ்டாலின்!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakandh and stalin will meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->