இனி ரஜினி சொன்னதைத்தான் நான் பின்பற்றுவேன்! விஜய பிரபாகர் அதிரடி!! - Seithipunal
Seithipunal


விஜயகாந்த் உடல் நலம் முழுவதும் தேறி, புதிய வேகத்துடன் அரசியலில் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையே விஜயகாந்த் சிகிச்சை முடிந்து  சில நாட்கள் முன்பு சென்னை திரும்புகிறார். அவர் வருகை தேமுதிக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

இதன் பிறகு பல அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்தனர். அவ்வகையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் நலம் விசாரித்தார். 

விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறியவை, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ள நண்பர் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம்  குறித்து விசாரித்தேன். அவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் துளிகூட அரசியல்  இல்லை.

இதற்கு முன்னதாக, விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகரின் கையை பிடித்துக் கொண்டு, மேடையில் உன்னுடைய அரசியல் பேச்சு காணொளியை பார்த்தேன். மிக சிறப்பாக பேசியுள்ளாய். தொடர்ந்து இதே போல் செயலாற்ற வேண்டும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

இதைத் தொடர்ந்து விஜய பிரபாகர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தவை, ரஜினி அங்கிள் இப்படி கூறியது மிக சிறந்த தருணமாக கருதுகின்றேன். நான் தொடர்ந்து அந்த நற்பாணியை பின்பற்றுவேன் என விஜய பிரபாகர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay prabhakar political speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->