தமிழக வாழ்வுரிமை கட்சி யாருடன் கூட்டணி?! எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட வேல்முருகன்!!  - Seithipunal
Seithipunal


வடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றது. இதில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் தேர்தல் கமிட்டி தலைவர் ஜம்புலிங்கம், அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெரோன்குமார், நகர செயலாளர் அய்யப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்கவில்லை. ஆனால், வேல்முருகன் செல்போன் மூலமாக பேசியது, கூட்டத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அந்த உரையில் அவர் கூறியிருப்பது:-

கூட்டத்திற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் என்னால் வர முடியவில்லை. உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பேன். தமிழக வாழ்வுரிமை கட்சி பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். 

ஒரு சீட்டுக்காக யாரிடமும் விலை போகாமல் தொடர்ந்து தமிழர்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுப்பேன். என தெரிவித்துள்ளார். 

தினகரன் ஆதரவு கட்சியாக பார்க்கப்படுவதாக பல தகவல்கள் வெளியான சூழ்நிலையில் வேல்முருகனின் இந்த பேச்சுக்கு என்ன காரணம் என அரசியல் விமர்சகர்கள் குழம்பி போய் உள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

velmurugan says about his coalition


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->