காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் அங்கு சென்றால் அவ்வளவு தான்!. சமூக ஆர்வலர்கள் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் குகை ஓவியங்கள் அமைந்துள்ளது. சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை. அங்கு உள்ள சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. இதனை காண்பதற்காக அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு அடிக்கடி வழக்கம்.

இந்தநிலையில் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தற்போதைய தலைமுறையில் சிலர் காதல் என்ற சொல்லுக்கு அர்த்தத்தையே மாற்றிவிட்டனர். காதல் என்ற பெயரில் ஒரு சில காதல் ஜோடிகள் பொது இடங்களில் செய்யும் செயலை பார்க்கும்போது பிறர் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு காதலர் தினத்தன்று காதலர்களில் சிலர், அங்குள்ள ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதும், மலை உச்சியில் நின்று செல்பி எடுப்பதும், சிலர் அநாகரிக செயல்களில் ஈடுபடுவதும் நடந்துவருகிறது. 

இந்தநிலையில், காதலர் தினத்தன்று சித்தன்னவாசலில் காதலர்களை அனுமதிக்க கூடாது எனவும், மேலும் சித்தன்னவாசல் பூங்காவில் செடி, கொடிகள் அடர்ந்த பகுதிகளில் அமர்ந்து அநாகரிக செயல்களில் ஈடுபடுவது, மற்ற சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைப்பது போன்றவற்றை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

எனவே சித்தன்னவாசல் நுழைவு வாயிலில் போலீசாரை நிறுத்தவும், பூங்காக்களில் உள்ள பகுதிகளில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

valentine's day restriction


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->