'அந்த ரெண்டு பேர கட்சில இருந்து நீக்குங்க நா வரேன்!!' நேரடியாகவே ஸ்டாலினியிடம் கூறிய கேப்டன்!! தோழமை கட்சிகளுக்கு வெடிகுண்டு!!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு கட்சிகளும் வருகின்ற மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வந்த நிலையில், ஏறக்குறைய கூட்டணி கட்சிகள், எந்த அணியில் இணையும் என்பது உறுதியாகி விட்டது. ஆனால், தேமுதிக மட்டும் இன்னமும் ஒரு உறுதியான முடிவை தெரிவிக்காமல் உள்ளது.

அதிமுகவிடம் தமிழகத்தின் மூன்றாவது கட்சியான பாமகவிற்கு கொடுக்கப்பட்ட அளவு தங்களுக்கும் சீட் வேண்டும் என கேட்ட நிலையில், அதிமுகவை சேர்ந்தவர்கள், தேமுதிகவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு பதிலை கூறவில்லை.

பிறகு தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்த்தை நேரில் சந்தித்து அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாக திருநாவுக்கரசர்  அறிவித்தார். 

யாரும் எதிர்பாராத நிலையில் விஜயகாந்தை சந்திக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்றுள்ளார். ஆனால், இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்த கேள்விக்கு "தேமுதிக பற்றி பேசவே வேனாம்" என கூறிய ஸ்டாலின் இப்பொழுது இப்படிப்பட்ட சந்திப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பமாக அமைந்துள்ளது. 

இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைய விஜயகாந்த் சார்பில் இரண்டு கோரிக்கைகள் வைப்பதாகவும், இதை திமுகவால் சமாளிக்க முடியவில்லை என்றும் தேமுதிக வட்டாரம் பதிலளிக்கிறது.

அதாவது, தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இரண்டு MLAக்களின் பதவிகளை பறிக்க வேண்டும் என்றும், தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இருந்து கடைசி நாளில் காலை வாரிவிட்டு தேர்தலில் நிற்காமல் சென்ற வைகோவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தேமுதிக சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறதாம்.

இதனால், திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றாராம். இதன் காரணமாக திமுகவின் தோழமைகட்சியான மதிமுகவும், அந்த இரண்டு MLA க்களும் கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko and DMK MLA may be exit by stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->