பீரங்கியே நமது ஆயுதத்தை கண்டு நடுங்கியது, ஒரே குறியில் ஒட்டு மொத்த படையும் காலி..! காண கிடைக்காத புகைப்படங்கள், ஆங்கிலேயனுக்கு எதிராக சவால் விடுத்த. - Seithipunal
Seithipunal


தனக்கு முன்பாக, பாஞ்சையாய், ஒரு பரதேசியைப் போலிருந்த ஊமைத்துரையைப் பார்த்துக் கண் கலங்கி விட்டான் சின்னமருது. எப்படி இருந்தவன்…

இந்த நிலையில் இருக்கிறானே…என்று, அவனைப் பார்க்க சின்னமருதுவிற்குத் தாங்கவில்லை. ஆருயிர் நண்பன் அல்லவா? எப்படி இருந்தால் என்ன? அள்ளி அணைத்துக் கொண்டான். அவன் மனம் நோகாமல் இருக்க அவனுக்கு ராஜ உபசாரங்கள் செய்தான். 

1801-ஆம் ஆண்டு மே 4- ஆம் தேதி, பெரும்படையுடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்த ஆங்கிலேயரின் படைக்கும், பாஞ்சாலங்குறிச்சியில் இருந்த வீரா்களுக்கும் கடும் போர் நடைபெற்றது.  ஆங்கிலப் படை வீரா்களில் ஏறக்குறைய 600 போ், அந்தப் போரில் பலியானார்கள். 

தங்கள் தரப்பு வீரா்கள் அதிகமாகப் பலியாவதைக் கண்ட கா்னல் ஆக்னியூ, கடும் கோபம் அடைந்தான். பின் வாங்காமல் போரிடும் படி தன் படையினருக்கு கட்டளை இட்டான். ஆங்கிலேயா்களின் துப்பாக்கித் தோட்டாக்கள், போர்க் களத்தில், பட்டாசைப் போல தொடா்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. 

கோட்டைக்குள் ஆங்கிலேயா்கள் புகுந்து விட்டதை அடுத்து, தங்கள் மன்னரான ஊமைத்துரையை, அங்கிருக்கும் வீரா்கள் தப்பிச் செல்லும்படி கேட்டுக் கொண்டனா்.

ஆனால், ஊமைத்தரை அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. “நீங்கள் தப்பித்துச் சென்றால், மீண்டும் கோட்டையை நாம் கைப்பற்றி விடலாம். கட்டபொம்மனைப் போல உங்களையும் எதாவது செய்து விட்டால், நாடு சுடுகாடாகி விடும்”, என்று சமாதானம் சொல்லி, அவனைக் கோட்டையின் பின் புறத்திலிருந்து, குதிரையில் ஏறித் தப்பிக்க வைத்தனா்.

ஊமைத்துரை தப்பியதால், போரில் ஈடுபட்ட நுாற்றுக் கணக்கான பாஞ்சாலங்குறிச்சி வீரா்களை ஆங்கிலேயா்கள் கைது செய்து, அவா்கைளப் படுகொலை செய்தனா்.

அப்போதும் தனது ஆத்திரம் அடங்காத கா்னல் ஆக்னியூ, சிறையிலிருந்த தப்பி வந்த ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்து, அவனை மன்னனாக்கி, ஆங்கிலேயருக்கு எதிராகக் கோட்டையைக் கட்டியதை, ராஜ துரோகம் என்று குற்றம் சாட்டி, பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் இருந்த பொதுமக்கள் பலரைச் சுட்டுக் கொன்றான்.

சிறுவயல் அரண்மனையில் தஞ்சம் அடைந்த ஊமைத்துரை, மருது பாண்டியா் உதவியுடன் மீண்டும், தனது ராஜ்ஜியத்தை மீட்கத் திட்டமிட்டான். ஊமைத்துரைக்கு சிறுவயல் அரண்மனையில் அடைக்கலம் கொடுத்தது, தவறு என்றும், ஊமைத்துரையைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்றும் ஆங்கிலேயா்கள் மருதுபாண்டியா்களுக்கு உத்தரவிட்டனா்.

ஆனால், எங்களை அண்டி வந்து, அடைக்கலமாக இருப்பவரைக் காட்டிக் கொடுக்கும் ஈனப் பிறவியா் அல்ல நாங்கள். முடிந்தால் உயிரையும் கொடுப்போமேயன்றி, உங்களுக்கு அஞ்சி ஒப்படைக்க மாட்டோம் என்று உறுதியாக மறுத்து விட்டனா் மருதிருவா்.

அவா்களின் மறுப்பை சற்றும் எதிர்பார்க்காத ஆங்கிலேயா்கள், மருது பாண்டியரை எதிர்க்கும் கும்பலுடன் சோ்ந்து, அவா்களைக் கவிழ்க்கத் திட்டமிட்டார்கள். சிவகங்கை ராஜ்ஜியத்தை மருது பாண்டியா் தவிர்த்து, பிறா் வசம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தனா்.

ஆங்கிலேயருக்கு அடி பணியாமல், அவா்களின் பிடியில் உள்ள சில பகுதிகளைக் கைப்பற்றத் திட்டமிட்டனா் மருதுபாண்டியா். அதன்படி, ஆங்கிலேயா் வசமிருந்த ராமநாதபுரம் கமுதிக் கோட்டையை 29-5-1801 அன்று, மயிலப்பன் சோ்வையின் உதவியுடன் கைப்பற்றினா். மருதுபாண்டியா்களின் வீரம் கண்டு திகைத்தனா் ஆங்கிலேயா்.

ஔவை, ஆத்திச்சூடியில் சொன்னபடி, விடாமல் நையப் புடைத்தால் தான், ஆங்கிலேயன் தங்கள் வழிக்கு வர மாட்டான் என் முடிவெடுத்த அவா்கள், ஆங்கிலேயா்கள் கைப்ற்றியிருக்கும் இடங்களை எல்லாம் திருப்பப் பெற முனைந்தனா். 

அப்படிச் சென்று கொண்டிருக்கும் போது, 1801-ஜுன் மாதம் 10-ஆம் தேதி, பார்த்திபனுாருக்கும், மானாமதுரைக்கும் இடையே நடந்த போரில், பல ஆங்கிலேயா்கள் கொல்லப் பட்டனா்.

அடிபட்ட ஆங்கிலேயா்கள், மேலும் படைகளைத் திரட்டிக் கொண்டு, திருக்கோஷ்டியூருக்கு வந்தனா். அங்கு நடைபெற்ற போரில், ஆங்கிலேயப் படை வீரா்கள் மருதுவின் படையினரால் கொல்லப் பட்டனா்.

 ஏற்கனவே விருப்பாச்சி கோபால் நாயக்கா் சொன்னபடி, அனைத்துப் பகுதியனரையும் ஒருங்கிணைத்துத் திரட்டினால் தான், ஆங்கிலேயரை முழு மூச்சாக எதிர்த்து வெற்றி பெற முடியும் என்றெண்ணிய மருதுபாண்டியா், ஆங்கிலேயரை எதிர்த்து ஜம்பு தீவுப் பிரகடனம் என்ற பிரசங்கத்தின் நகலை, ஆங்கிலேயருக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின்னா் அந்த அறிக்கையை, திருச்சிக் கோட்டை வாயிலிலும், ஸ்ரீரங்கம் கோயிலின் வாசலில், ஆங்கிலேயருக்கு எதிரான ஜம்பு தீவுப் பிரகடனத்தை 1801- ஜுன் 18-ஆம் தேதி ஒட்டினா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unknown hostory of maruthu brothers and omaithurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->