பாஜகவுக்கு எதிராக ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்! கலக்கத்தில் பாஜக! 3 ஆவது அணி உருவாகிறது! காங்கிரஸ் திமுக கூட்டணி உடைக்கிறதா? - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற பெயரில் மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது.

ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு அலைகடலென மக்கள் கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து முக ஸ்டாலின் சென்றுள்ளார். 

இந்த பிரமாண்ட மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெங்காலியில் தனது உரையை தொடங்கினார். அப்போது, பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பதுதான் உண்மையான சுதந்திர போராட்டம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல் நாம் வேறு மாநிலங்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் போராடி பாஜகவை வீழ்த்த வேண்டும். 

எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான் எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார்; நம் ஒற்றுமையால் அவருக்கு பயம் வந்துவிட்டது. நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஸ்டாலின் பேசி வருகிறார்.

இக்கூட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் மக்களவை தேர்தலில் மம்தா தலைமையில் 3 ஆவது  அணி அமையுமா? இல்லை, காங்கிரசுடன் கூட்டாட்சி முறையில் கூட்டணி வைக்கப்படுமா என்பது, பொருந்து இருந்து பார்த்தால் தான்  தெரியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

United India At Brigade MK Stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->