உளுந்தூர்பேட்டை மாணவியின் மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள் - மாணவியர் விடுதியில் உண்மையில் என்ன நடந்தது..? - Seithipunal
Seithipunal


உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அரசு மாதிரிப்பள்ளி மாணவியர் விடுதியில் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி காவல்துணை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தில் வசிப்பவர் கோபி. கார் ஓட்டுநனர். இவரது மகள் லாவண்யா(16). இவர் ஏ.குமாரமங்கலத்தில் அரசு மாதிரிப்பள்ளி விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு கணிணி அறிவியல் படித்துவந்தார்.

இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி காலை வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்ற சரண்யா அரையாண்டுத் தேர்வு எழுதிவிட்டு மதியம்விடுதிக்கு வந்துள்ளார்.

பின்னர், தனது அறையில்தூக்கிட்டு உயிருக்கு போராடிய நிலையில் மாணவிகளால் அவரைமீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து, 12ஆம்தேதி புதனன்று மரணமடைந்தார். இதன்படி மாணவி அரையாண்டுத் தேர்வு எழுதிவிட்டு விடுதிக்கு செல்லும்போது ஆசிரியர் ஒருவரும், விடுதி காப்பாளரும் வேறு காரணத்திற்காக லாவண்யாவை கடுமையாக திட்டியதாகவும், ஆம்புலன்சில் லாவண்யாவிடம் பேசக்கூட விடாமல் தன்னை விடுதி வார்டன் தடுத்ததாக லாவண்யாவின் தாயார் கூறுகிறார்.

மேலும் அவரின் தந்தை கோபியிடம் காவல்துறையினர் கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்றதாக கூறப்படுகிறது. கோபி கொடுத்த புகாரை காவல்துறையினர் வாங்க மறுத்துள்ளனர்.

எனவே மாணவியின் மரணம் குறித்து துணை கண்காணிப்பாளர் விசாரித்து உண்மை வெளிவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அந்த  மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ulundurpet school student suicide case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->