அனைவருக்கும் டிவி வழங்கியது போல் விரைவில் செட்டப் பாக்ஸ்.! உதயநிதி அதிரடி.!!  - Seithipunal
Seithipunal


இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர். அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. 

தமிழகத்திலும் வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி செயல்பாடுகள்., தொடர் கூட்டங்கள் போன்று நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில்., தமிழகத்தின் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் மூலமாக கிராம சபை கூட்டமானது அந்தந்த கிராம புறங்களில் நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கூட்டமானது அனைத்து ஊராட்சிகளில், திமுக கிராம சபை கூட்டத்தை நடத்தி., மாவட்ட வாரியாக சில ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஸ்டாலினும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மக்களிடம் கருத்து மற்றும் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். 

இந்நிலையில்., தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் "தாத்தா கருணாநிதி ஏழை எளிய மக்களுக்கு இலவச தொலைக்காட்சிகளை வழங்கியது போலவே., வரும் பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று அனைவருக்கும் செட்டப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi-Stalin speech to give setup box for cable connections


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->