கிண்டல் பேச்சு.. துண்டுச் சீட்டு…? பேசி பேசியே ஆட்சியை பிடித்து கெட்டுப்போன தி.மு.க-விற்கு முட்டு கொடுக்கிறாராமே மூன்றாம் கலைஞர்..! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இப்போது இந்த தேர்தலில் அரசியல் ஆழத்தை கற்றுக்கொள்கிறாராம். உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக திமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்துக்கொண்டு வருகிறார்.

அதோடு, திமுக போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கு நேரடி பிரச்சாரத்திற்கு தயாராகியுள்ளார்.

செல்லும் இடங்களில் கூட்டத்தைப் பார்த்து கையசைத்தபடியே, ஸ்டாலின் வழக்கமாக பேசுவதையே திரும்ப திரும்ப பேசுவது போல  ‘‘என்னை யார்னு தெரியுதா?’’ என்று கேட்கும் உதயநிதி, ‘‘நான்தான் கலைஞரின் பேரன்.. ஸ்டாலினின் மகன்..’’ என்று அறிமுகம் செய்துகொண்டு, பேச்சைத் தொடங்குகிறார்.

துண்டுச் சீட்டில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது அதை பார்த்து, எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசுகிறார்.

குறிப்பை பார்த்து பேசினாலும், அதை நகைச்சுவையோடும், கிண்டலாகவும் எடுத்துரைப்பதால் கூட்டத்தினர் கைதட்டி, ரசித்துக் கேட்கின்றனராம். பேச்சின் நடுவே, ‘‘செய்வீர்களா..?’’, ‘‘ஓட்டு போடுவீர்களா?’’ என்று ஜெயலலிதா பாணியில் அவர் கேட்பதும் தொண்டர்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது.

பேசி பேசிய ஆட்சியை பிடித்து தமிழகத்தை சீரழித்து விட்டு, இப்போது பேசி சிரிக்க வைத்து, தமிழக மக்கள் வாழ்க்கையை சிரிப்பாக சிரிக்க வைக்க போகிறார்களா..? என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanidhi-stalin-busy-with-election-campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->