ஆட்டு தோலை விற்பது போய்!  புலித்தோலை விற்க முயன்ற இருவர்!! காவல் துறையினர் அதிரடி!!!      - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி மற்றும் சிறு மலை ஆகிய மலை வனப் பகுதிகளில், மயில், மான், சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன.
    
கன்னிவாடியை அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், வன விலங்குகள் அடிக்கடி மர்ம நபர்களால் வேட்டையாடப் படுவதாக, அந்தப் பகுதியில் வாழும் மக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
    
இங்குள்ள அரிகேச பர்வத மலை, மிகவும் புகழ் பெற்றது. பழனியில் உள்ள நவபாஷாண பால தண்டாயுதபாணி சிலையை, போகர் சித்தர், இங்குள்ள குகையில் தான் செய்தார்.
    
இந்தப் பகுதியில், அடர்ந்த மலை வனம் இருப்பதால், அதிக ஆள் நடமாட்டம் இருக்காது. இதனைப் பயன் படுத்தி, சில சமூக விரோதிகள், இந்த வனத்தில் வாழும் மிருகங்களை வேட்டையாடி விற்று வருகின்றனர்.
    
இதைக் கேள்விப்பட்ட வனத்துறையினர், இந்தப் பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, கன்னிவாடி அருகே உள்ள அமைதிச் சோலையைச் சேர்ந்த பால்சாமி (வயது 60), தர்மத்துப்பட்டி கோம்பையைச் சேர்ந்த ரமேஷ் (வயது 40) ஆகியோர், ஒரு புலித் தோலை வைத்துக் கொண்டு, அதனை பழனியில் விற்க முயற்சிப்பது தெரிய வந்தது.
    
இதனை அறிந்த, அமராவதி வனச்சரகர் ரெங்கசாமி தலைமையிலான குழு, தர்மத்துப்பட்டியில் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த புலித்தோலைக் கைப்பற்றினர். அந்த இருவரும் கைது செய்யப்ட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two men tried to sell the tiger in arrested


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->