கோஷ்டி தகராறில் கோயில் சிலைகளை உடைத்த ராணுவ வீரர்கள்..!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு அருகே உள்ள மாங்குளத்தில் செண்பகமூர்த்தி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆனி மாதம் திருவிழா நடத்துவது தொடர்பாக, கோயில் நிர்வாகிகளுடன், ராஜா (வயது 24), ஆபிரஹாம் லிங்கன் (வயது 24) ஆகியோருக்கு, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பின் அதுவே, முன் விரோமாக மாறி விட்டது. ராஜாவும், லிங்கனும் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார்கள்.

கோயில் திருவிழா நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே, கோயில் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட தகராறை மனதில் வைத்து, ஏதாவது செய்ய வேண்டும், என்று ராஜாவும், லிங்கனும் நினைத்தனர்.

பின், தங்களது நண்பர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு, நேற்று முன் தினம் இரவு, செண்பகமூர்த்தி கோயிலின் கதவை உடைத்து, உள்ளே இருந்த, செண்பகமூர்த்தி, பேச்சியம்மன் உட்பட 7 சிலைகளை உடைத்து விட்டுச் சென்றனர்.

நேற்று காலை கோயில் பூசாரி, கோயிலைத் திறக்க வந்த போது, கோயிலின் பூட்டு உடைக்கப் பட்டிருந்ததையும், உள்ளே சாமி சிலைகளும் உடைக்கப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கோயில் நிர்வாகிகளுடன், ஆவியூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணை செய்த போலீசார், கோயில் சிலையை உடைத்தவர்களில், ஆப்ர    ஹாம் லிங்கனைக் கைது செய்தனர். 

மற்றொரு ராணுவ வீரர் ராஜா மற்றும் அவருடைய நண்பர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two army man damaged a god statue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->