என்ன கொடுமை இது?! முன்பு ஸ்டெர்லைட் ஆலையை மூட போராட்டம்.! தற்போது அதே ஆலையை திறக்க மனு.!!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஒரு சில அமைப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், மக்களுடன் சேர்ந்து பல போராட்டங்களையும் செய்து வந்தனர். இந்த ஆலையினால் மக்களுக்கு ஆபத்து எனவும், இதனால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவும் மக்களை தூண்டி விட்டு மூளைச்சலவை செய்ததால் தான் மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது, இதனால் அநியாயமாக 13 பேர் சுட்டுக்கொள்ளப் பட்டது குறிப்பிடத் தக்கது.

இதனைத் தொடர்ந்து, தற்போது மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த ஆலைக்கு அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்கள் கிராமத்திற்கு கிடைத்த உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் ஏராளமானோர் வேலையிழந்துள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.

மேலும் இவர்களைத் தொடர்ந்து, பல லாரி உரிமையாளர்களும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 22 ஆண்டுகளாக லாரி தொழில் செய்து வந்தோம். தற்போது ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் வங்கிகளில் வாங்கிய கடன் தவணையை செலுத்த முடியவில்லை எனவும், இதனால் தங்களது லாரிகள் மற்றும் சொத்துகளை விற்கும் நிலைக்கு வந்து விட்டோம். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதேபோல், ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்தவர்களும் வேலையிழந்துள்ளதால் அவர்கள் தாங்கள் வாங்கிய வங்கிக்கடனை கட்ட முடியாமல் வருவதாகவும் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tuticorin people pettition for again open sterlite factory to district collector


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->