அடிக்கிற காத்திலே, துாத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரத்திற்குப் போன படகு.! - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களாக, தென் தமிழகத்தின் பல பகுதிகளில், சூரைக் காற்று அதி வேகமாக வீசுகிறது. பல இடங்களில் வீடுகளின் மேல் கூரைகள், தகரம், போர்டு என, சகலமும் பறந்து சென்று, நடமாடுபவர்களைப் பயமுறுத்துகின்றன.

ராமேஸ்வரம் கடலில், மிக பலமாக காற்று வீசுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம், என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர். பலர் அதையும் மீறி கடலுக்குள் சென்றுள்ளனர்.

நேற்று, ஒரு நாட்டுப் படகு, ராமேஸ்வரம் கடலில் கரை ஒதுங்கியது. இதனால், அச்சம் அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள், மரைன் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

அவர்கள் வந்து, அந்தப் படகை சோதனை செய்த போது, அதனுள் எந்தப் பொருளும் இல்லை. இது பற்றி அவர்கள் விசாரித்தனர்.

கடந்த 12-ஆம் தேதி, துாத்துக்குடியைச் சேர்ந்த அருள் என்பவர், கரையில் நிறுத்தி வைத்திருந்த தனது படகைக் காணவில்லை, என அங்குள்ள மரைன் போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தார்.

தற்போது, ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய படகு அவருடையது தான் என நிரூபணம் ஆகியது. காற்றுக்கு, நங்கூரம் கயிறு அறுந்து, படகு ராமேஸ்வரம் வரை சென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tuticorin boat go to rameswaram in hurricane


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->