திருச்சி விமான நிலையத்தில், மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கும், உள்நாட்டிற்கும் விமானம் இயக்கப்படுகிறது. அவ்வாறு வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், அரிய வகை உயிரினங்களை கடந்த சில நாட்களாக கடத்தி வருகின்றனர்.

இவற்றை தடுக்க அதிகாரிகள் பல்வேறு வகையில் சோதனையில் நடத்தி வருகிறன. அவ்வாறு சோதனைகள் செய்தாலும் பயணிகள் தங்கத்தை கடத்தும் சம்பவங்கள் இதுவரை குறையவில்லை. தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு வந்தது. இதில் வந்த பயணிகளின் பெருட்களை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனனையிட்டனர்.

அப்போது மலேசியாவைச் சேர்ந்த கமலாம்பிகை என்பவர் உடலில் மறைத்து எடுத்து வந்த 20.700 கிராம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் நவீன ஸ்கேன் கருவி மூலம் கண்டுபிடுத்துள்ளனர். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 15.87 லட்சமாகும். தங்கம் கடத்தி வந்த பெண்ணிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடந்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy airport gold seized


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->