திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீட்டுக் கொள்கையை உருவாக்கி அமல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி கிரேஸ் பானு கணேசன் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜே.சத்தியநாராயண பிரசாத் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

அப்போது அரசு சார்பில், "திருநங்கைகள் கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், இந்த செயல்முறையை முன்கூட்டியே செய்ய முடியாது. தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்ட பிறகு, மூன்று மாதங்களுக்குள் கணக்கெடுப்பு முடிக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை சமர்ப்பித்த பிறகு, சர்வே அறிக்கையின் அடிப்படையில் திருநங்கைகளுக்கு கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட அமர்வு, மேலும் சமர்ப்பிப்பதற்காக வழக்கை ஜூலை ஐந்தாம் ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transgender reservation case today hearing


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->