பத்திரிகையில் பெயர் இல்லை என விபரீத முடிவு எடுத்த பூசாரி!! திருநங்கைக்கு நேர்ந்த சோகம்!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் உள்ள எஸ்.எஸ்.மாணிக்கப்புரத்தை சேர்ந்தவர் ராஜாமான்சிங் என்ற ராசாத்தி(38) என்பவர் ஒரு திருநங்கை. இவர் தாளமுத்துநகரில் உள்ள முருகன் தியேட்டர் அருகே உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாகவும், கோவில் நிர்வாக பொறுப்பையும் கவனித்து வந்தார்.

இவருக்கும், அந்த கோவிலில் ஏற்கனவே பூசாரியாக இருந்த பூபால்ராயர்புரத்தை சேர்ந்த பாண்டி மகன் மருது(26) என்பவருக்கும் கோவிலில் பூஜை செய்வது, நிர்வாகத்தை கவனித்து கொள்வது தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்ததாக தெரியவந்து உள்ளது. 

அந்த கோவிலில் கொடை விழா நடக்க உள்ளதால், அதற்காக ராசாத்தி தனது நபர்களுடன் சேர்ந்து நன்கொடை வசூல் செய்து, கோவில் கொடை விழாவிற்கு பத்திரிகை அடித்துள்ளார்.

அந்த பத்திரிகையில் மருதுவின் பெயரை போடவில்லை. அதனால் ஆத்திரமடைந்த மருது தனது நண்பருடன் சேர்ந்து நேற்று முன்தினம் மாலையில் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவில் முன்பு நின்று கொண்டிருந்த ராசாத்தியிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி, தலை துடித்துடிக்க படுகொலை செய்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், ஞானராஜ், ஜீவமணி தர்மராஜ் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு காட்டு பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன் பேரில் போலீசார் அங்கு சென்றனர். ஆனால் கொலையாளிகள் போலீசை வருவதை அறிந்து, அதற்குள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். தலைமறைவாக உள்ள பூசாரி மருது மற்றும் அவரது நண்பரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Transgender murder near thoothukudi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->