கோவையில் முதல்முறையாக 'ரயில் பஸ்'.! கொண்டாட்டத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


கோவை: மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு வரை இடையே ரயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலா தளமான ஊட்டிக்கு மலை இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயில் வழித்தடத்தில் கல்லாறில் இருந்து குன்னூர் வரை பர்னஸ் ஆயில் இன்ஜின் மூலமும், குன்னூர் - ஊட்டி பாதையில் டீசல் இன்ஜின் மூலமும் அந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்டம், குன்னூர்-ஊட்டி இடையே 'ரயில் பஸ்' இயக்க முடிவு செய்து. குஜராத் மாநிலத்தில் இயக்கப்பட்டுவரும் ரயில் பஸ் ஒன்றை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவந்தது.

அந்த ரயில் பஸ் அங்கு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின், நேற்று மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு வரை, ரயில் பஸ் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்று உள்ளது.

இதனை அடுத்து அந்த ரயில் பஸ், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுப்பி நவீன தொழில்நுட்பத்துடன், கண்ணை கவரும் வகையில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த ரயில் பஸ் கடந்த 1998ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது டீசலில் இயக்கப்படுகிறது. 60 இருக்கைகள் கொண்ட இந்த ரயில் பஸ் முன்னும் பின்னும் 2 டிரைவர்களால் இயக்கப்படும் வகையில் அமைந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRAIN BUS IN KOVAI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->