செவிட்டு அய்யனாருக்கு பயந்து... சிவகங்கையில் ஒரு கிராமமே குடிசையில் வாழும் விநோதம்..!! - Seithipunal
Seithipunal


இந்த ஊரில் மாடி வீடு கட்டினால், உயிர் பலி வாங்கி விடுமாம்.. இப்படியும் ஒரு கலாச்சாரம்..

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே 6 கி.மீ. தொலைவில் எஸ். கோவில்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில், சுமார் இரண்டாயிரம் வீடுகள் இருக்கின்றன. இங்கு ஆரம்பப் பள்ளி மற்றும் நடு நிலைப் பள்ளிகள் உள்ளன.

இந்த ஊருக்கு, செவிட்டு அய்யனார் தான் குல தெய்வமாக இருக்கிறார். இவருக்கென்று தனியாக ஒரு கோயில் உள்ளது. இந்த ஊரில் யாரும் மாடி வீடு கட்டக் கூடாதாம்.

மீறி கட்டியவர்களை, செவிட்டு அய்யனார் வாழ விட மாட்டாராம். உயிர் பலியே வாங்கி விடுவாராம். அதனால், இந்த ஊரில் உள்ள வீடுகள் எல்லாம் குடிசை வீடுகளாகத் தான் இருக்கின்றன.

இதற்குப் பின்னணியில் ஒரு கதை உள்ளது. முன்பு இந்தப் பகுதி எல்லாம் அடர்ந்த வனமாக இருந்தது. அதனால், இங்கு வசித்து வந்த மிருகங்களை வேட்டையாடுவது வழக்கம்.

அப்படி ஒரு தடவை வேட்டையாடும் போது, இங்குள்ள காட்டில் ஓடிக் கொண்டிருந்த மானை நோக்கி, வேல் கம்பு ஒன்றை எரிந்தனர். அந்த வேல் கம்பு, ஒரு புதரில் செருகி நின்றது.

அருகில் சென்று பார்த்த போது, அந்த வேல் கம்பு, அந்தப் புதரில் உள்ள வள்ளிக் கிழங்கின் மீது பாய்ந்து நின்றிருந்தது. அந்த வேல் கம்பிலிருந்து ரத்தம் வழிந்திருக்கிறது.

அதனால் பதறிப் போனவர்கள், மண்ணைத் தோண்டிப் பார்த்த போது, அந்த வேல் கம்பு, மண்ணில் புதைந்திருந்த அய்யனார் சிலையின் காதில் குத்தி ரத்தம் வழிந்திருக்கிறது.

அந்த சிலையை எடுத்து, கோயில் எழுப்பி மக்கள் வணங்கி வந்தனர். அவர் செவிட்டு அய்யனார் என்று அழைக்கப் படுகிறார். அவர் காதில் காயம் பட்டதால், இங்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைவருக்கும், காதில் ஓட்டை போட்டு பெரிதாக்கி, ஈய வளையத்தை மாட்டி விடுகின்றனர்.

தவிர, அய்யனார் மண் தரையில் இருப்பதால், அவரைத் தாண்டி யாரும் உயரமான அளவில், மாடி வீடு ஏதும் கட்டுவதில்லை. இன்றும் இந்தக் கலாச்சாரம் தொடர்ந்து வருகிறது!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tottal village no concrete home


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->